தரமுயர்த்தக் கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக பிரச்சினை தொடர்பாக எதிர்வரும் 3 மாதங்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர் வஜிர அபேரவர்தன இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த பிரதேச செயலகத்துக்கு பிரத்தியேக கணக்காளர் ஒருவரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டு, தற்போது அவர் மாவட்ட செயலகத்தில் இருந்து செயற்பட்டு வருகிறார் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், இந்த விடயம் குறித்து ஆராய்ந்து முடிவுகளை எடுப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் சம்மந்தப்பட்ட தரப்பினரை உள்ளடக்கி தேசிய குழு ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. ஈஸ்டர் தாக்குதலுக்கு பிறகு குறித்த குழுவின் நடவடிக்கைகள் முடங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்துடன், குறித்த பிரச்சினைகளை எதிர்வரும் 3 மாதங்களுள் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும் உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க