உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

அரசாங்கம் உண்மைகளை மூடி மறைக்கின்றது-கர்தினால் ரஞ்சித் ஆண்டகை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்புடைய உண்மைகளை மூடி மறைப்பதாக இலங்கை அரசாங்கத்தை கத்தோலிக்க திருச்சபை தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையில் மேற்கொள்ளப்படவிருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உளவுத்துறை எச்சரிக்கையினை அரசாங்கம் அலட்சியம் செய்துள்ளதென கத்தோலிக்க திருச்சபை தலைவர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை விமர்சித்துள்ளார்.

போப் ஆண்டவர் பிரான்சிஸை சந்திப்பதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ரொய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் பிரபல விடுதிகளில் இடம்பெற்ற தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.குறித்த தாக்குதலுக்கு ஐ. எஸ் அமைப்பினர் உரிமை கோரியிருந்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பில் ஏப்ரல் 4 ஆம் திகதி இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதோடு தாக்குதல் இடம்பெற்ற அன்றும் காலை 6.45 மணியளவில் தொலைபேசியில் தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த எச்சரிக்கை தொடர்பில் எந்தவித அக்கறையும் செலுத்தப்படவில்லை.

ஜனாதிபதி நாடாளுமன்ற விசாரணைகளை விமர்சிக்கிறார். தேசிய பாதுகாப்பை தவறாக கையாளுவதாக அவரை சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.

ஒவ்வொரு தரப்பும் தங்களது பக்கம் பிழை இல்லை என்பதை நிரூபிக்கவே முயற்சிக்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தாக்குதல் தொடர்பான காணொளி ஒன்றையும் அவர் போப் ஆண்டவருக்கு சமர்ப்பிக்க உள்ளார்.

கருத்து தெரிவிக்க