வவுனியாவில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று வெளிவிவகார அமைச்சர் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டார்.
வவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இக்கூட்டம் இடம்பெற்றது இதில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன , இராணுவத்தின் வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, பொலிஸ் அதிகாரிகள், விமானப்படை அதிகாரிகள், உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் அருவித்தோட்டத்தில் இராணுவம் கையப்படுத்தியுள்ள 123 ஏக்கர் காணியை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வனவளத்திணைக்களத்திடம் இராணுவத்தினரின் பாவனைக்காக மாற்றுக்காணிகளை கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சரோ ஏனைய அதிகாரிகளோ கருத்துக்கூற மறுத்துவிட்டனர்.
கருத்து தெரிவிக்க