சீன ஜனாதிபாதி ஜீ ஜின்பிங் வடகொரியாவிற்கு 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணத்தின்போது வடகொரிய தலைவர் கிம் ஜோன் உன்-உடன் சீன ஜனாதிபதி பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
இதன் போது நிறுத்தி வைக்கப்பட்ட வட கொரியாவின் அணு ஆயுத திட்டம் குறித்தும், பொருளாதார பிரச்சினைகள் குறித்தும் ஆலோசனை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன தலைவர் ஒருவர் வட கொரியாவுக்கு பயணம் மேற்கொள்வது கடந்த 14 வருடங்களில் இதுவே முதல் முறையாகும்.
வட கொரியாவின் முக்கிய வர்த்தக பங்காளியாக சீனா விளங்குகிறது. வடகொரிய தலைவர் கிம் 4 முறை சீனாவுக்கு சென்று ஜனாதிபதி ஜின்பிங்கை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க