புதியவைவிளையாட்டு செய்திகள்

இங்கிலாந்தை வெற்றிகொள்ளுமா இலங்கை ?

உலகக் கிண்ண கிரிக்கட்டின் 27வது லீக் போட்டியில், இங்கிலாந்து இலங்கை அணிகள் இன்று மோதவுள்ளன.

இங்கிலாந்து ஹெடிங்லி மைதானத்தில் இந்த போட்டி இலங்கை நேரப்படி  பிற்பகல் 3 .00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இதுவரை உலகக் கிண்ண போட்டிகளில் 10  தடவைகள் மோதியுள்ளன .

இதில் இங்கிலாந்து அணி 6 முறையும் இலங்கை அணி 4 முறையும் வெற்றியை பதிவு செய்துள்ளது. தற்போது இடம்பெறும் தொடரில் இங்கிலாந்து அணி ஐந்தில் 4 போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளது.

இதன் படி புள்ளி பட்டியலில் 2 ஆம் இடத்தில் உள்ளது. இலங்கை அணி 5 போட்டிகளை எதிர்கொண்ட நிலையில் 2 போட்டிகளில் தோல்வி அடைந்து 1 போட்டியில் வெற்றி பெற்றது. ஏனைய 2 போட்டிகள் சீரற்ற காலநிலையால் இரத்து செய்யப்பட்டது.

கருத்து தெரிவிக்க