சினிமா

“பாக்ஸர்” திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக அருண் விஜய்!

மகிழ்திருமேனியின் இயக்கத்தில் அருண்விஜய் நடித்த “தடம்” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து; அறிமுக இயக்குனர் விவேக்குடன் “பாக்ஸர்” என்ற படத்தில் கூட்டணி சேரவிருக்கிறார் அருண்விஜய். இப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடிக்கும் அருண் விஜய்க்கு ஜோடியாக இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங் நடிக்கிறார். மேலும், இப்படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வி. மதியழகன் தயாரிக்க இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின், ஷீட்டிங் பணிகள் பூஜையுடன் தொடங்கவிருப்பதாகவும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லா ஸ்டூடியோவில் இன்று காலை 10.30 மணியளவில் திரைப்படத்தின் பூஜைகள் நடைபெறவிருப்பதாகவும் தயாரிப்புக் குழுவினர் தெருவித்துள்ளனர்.
இது தவிர, பாகுபலி நாயகன் பிரபாஸ் உடன் சாஹோ படத்திலுல், “மூடர் கூடம்” மற்றும் விஜய் ஆண்டனியின் “அக்னி சிறகுகள்” படத்திலும் அருண் விஜய் இணைந்து நடித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க