சினிமா

அதிகம் உழைக்கும் காஜல் அகர்வால்

படவாய்ப்புகள் இருக்கும் போதே நகை வியாபாரம், விளம்பரம், ஒரு பாடலுக்கு நடனம் என பல வகையிலும் காஜல் அகர்வால் உழைப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பட வாய்ப்புகளை மாத்திரம் நம்பியிராமல் காஜல் பட நிறுவனம் தொடங்கி தயாரிப்பிலும் இறங்கி உள்ளார். தவிர ஜூனியர் என்.டி.ஆர். நடித்துள்ள ஜனதா காரேஜ் படத்தில் ஒரு பாடலுக்கு அவர் ஆடிய நடனம் வரவேற்பை பெற்றது.

இதை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பலவகையிலும் காஜல் உழைத்து வருகிறார்.

கருத்து தெரிவிக்க