திஸ்ஸமஹாராமையில் குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் பெற்றோர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த குழந்தை ஊட்டச்சத்து குறைப்பாடு காரணமாக உயிரிழந்ததாக பிரதேசமக்கள், குழந்தையின் பெற்றோர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
பெற்றோர் குழந்தை மீது உரிய அவதானம் செலுத்தி இருந்தால் குழந்தையின் உயிரை காப்பாற்றியிருக்கலாம் எனவும் பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில், குடும்ப சுகாதார பணியாளர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்படப்போவதாக அரசாங்க குடும்ப சுகாதார அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன், அரசாங்க அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால் தமது சங்கமும் பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கும் என இலங்கை அரசாங்க அதிகாரிகள் தொழிற்சங்க ஒன்றிய சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த குழந்தையின் மரணம் தொடர்பில் அரசாங்க அதிகாரிகள் ஐந்து பேரை பணியில் இருந்து இடைநிறுத்த வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க