வடக்கு செய்திகள்

மன்னாரில் சர்வமத ஸ்தலங்களுக்கான நல்லிணக்க தரிசிப்பு

மன்னார் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்கள், பௌத்த விகாரை மற்றும் இந்து கோவில்களுக்கான நல்லிணக்க தரிசிப்பு நிகழ்வு இன்று காலை முதல் மாலை வரை இடம் பெற்றது.

அண்மையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களின் பின்னர் நாட்டில் பல்வேறுபட்ட மத ரீதியான முறுகள் நிலை தோன்றியுள்ளதால் , மத ரீதியில் நல்லிணக்கத்தை தோற்றுவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

தேசிய சமாதான பேரவையின் அணுசரனையில் மன்னார் துயர்துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் ஒழுங்கமைப்பில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட சர்வ மத ஒன்றியத்தின் தலைவர்கள் , பிரதிநிதிகள் , அருட்தந்தையர்கள், மௌலவிகள் , விகாராதிபதிகள் உட்பட மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மன்னார் சின்னக் கரிசல், புதுக்குடியிருப்பு , எருக்கலம் பிட்டி , தாராபுரம் , மன்னார் பெரிய பள்ளிவாசல் , உட்பட மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரதான 6 பள்ளி வாசல்கள் மற்றும் இந்து கோவில்களையும் தரிசித்ததுடன் சாந்திபுரம் பகுதியில் உள்ள பௌத்த விகாரைக்கும் விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் ஒவ்வொறு ஸ்தலங்களிலும் நல்லிணக்க கலந்துரையாடல் இடம் பெற்றது.

கருத்து தெரிவிக்க