இதுவரை வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை பெற்றுக் கொள்ளாதவர்கள் உடனடியாக அதனை பெற்று தமது வாக்குரிமையை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கிராம சேவகர் ஊடாக தமது படிவத்தினை பெற்றுக் கொள்ளுமாறு யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமர்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த மே 15 ஆம் திகதியிலிருந்து ஜூன் 14 ஆம் திகதிவரைக்கும் வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் விநியோகிக்கப்பட்டது.
இருப்பினும் அப்படிவங்கள் உரிய முறையில் தம்மை வந்தடையவில்லை என்று சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் பெறுவதில் சிக்கல்கள் உள்ளவர்கள் உடனடியாக முறைப்பாடுகளை பதிவு செய்யலாம்.
(தேர்தல் அலுவலக தொலைபேசி இலக்கம்) 0212222655, (தொலை நகல்) 0212228002, (அரசாங்க அதிபரின் முறைப்பாட்டு இலக்கம்) 0212225000 ஆகிய தெலைபேசி இலக்கத்திற்கு தொர்பு கொண்டு முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் .
முறைப்பாடுகள் தொடர்பில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உதவித் தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க