நாடாளுமன்ற பாதுகாப்பிற்கு பயன்படுத்த கூடிய உபகரணங்களை சீனா இலங்கைக்கு வழங்கியுள்ளது.
33 மில்லியன் பெறுமதியான குறித்த உபகரணங்களை சீன அரசாங்கத்தின் சார்பில் சீன தூதுவர் செங் சூயுவான் சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் ஒப்படைத்துள்ளார்.
நாடாளுமன்ற பாதுகாப்பிற்கு பயன்படுத்த கூடிய மூன்று எக்ஸ்ரே இயந்திரங்கள் மற்றும் ஐந்து டிடெக்டர்கள் வழங்கப்பட்டதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
அவசர தேவைக்காக சீனா வழங்கியுள்ள மேற்படி உபகரணங்கள் மூலம் அனைத்து அரசியல் கட்சிகளிடமிருந்தும், நாடாளுமன்ற ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறந்த பாதுகாப்பு கிடைக்கும் என சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது .
இதேவேளை ஜூன் 17 ஆம் திகதி, இலங்கையின் 20 சிரேஷ்ட படையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் முதல் தொகுதி சீனாவில் 2 வார பயிற்சி திட்டத்தின் பின்னர் நாடு திரும்பியது.
அத்துடன் இலங்கையின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் மே 9 ஆம் திகதி, சீனா வழங்கிய 10 பொலிஸ் ஜீப்கள் இலங்கை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க