சிரியா மற்றும் ஈராக் முழுவதும் ஏற்பட்ட இழப்புகளை அடுத்து, ஐ.எஸ்.ஐ.எஸ் தனது கவனத்தை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பக்கம் திருப்புவதால், இலங்கை மற்றும் இந்தியா அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதென இந்திய உளவுத்துறை தகவல்கள் எச்சரித்துள்ளன.
கேரள உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இந்திய உளவுத்துறை அனுப்பிய மூன்று கடிதங்கங்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல் வளர்ச்சிக்கான சாத்தியம் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
ஈராக் மற்றும் சிரியாவில் நிலப்பரப்பை இழந்த நிலையில் அந்தந்த நாடுகளில் தங்கியிருக்கும் ஜிகாதிகள் மூலம் வன்முறைகளை கட்டவிழ்த்து விட ஐ.எஸ். அமைப்பினர் தூண்டுவதாக அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கொச்சியில் உள்ள முக்கிய வியாபார தளங்கள் உட்பட முக்கிய நிறுவனங்கள் ஐ.எஸ். இலக்குகளாக மாறக்கூடும்” என இருவரங்களுக்கு முன்னர் உளவுத்துறையால் அனுப்பட்ட மற்றுமொரு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பான இணைய செயல்பாடு அதிகரித்திருப்பது பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறுவதற்கான அறிகுறிகளாகும் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்து தெரிவிக்க