உள்நாட்டு செய்திகள்புதியவை

‘அலோசியஸின் வெளிநாட்டு பயண அனுமதி இரத்து செய்யப்பட வேண்டும்’

மத்திய வங்கி முறிகள் மோசடியின் சந்தேகநபரான ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸூக்கு வௌிநாடு செல்ல வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்யுமாறு சட்ட மா அதிபரால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு நகர்த்தல் பாத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து இரு தரப்பினரும் தமது விளக்கங்களை இன்று முன்வைக்கும் வகையில் கொழும்பு பிரதம நீதவான் நேற்று விசாரணையை ஒத்தி வைத்தார்.

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவன தலைவரும் மோசடி வழக்கு சந்தேகநபருமான அலோசியஸிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் அவர் வௌிநாட்டு பயண அனுமதியை இரத்து செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.

மகளின் திருமண வைபவத்தில் கலந்துகொள்வதற்காக அடுத்த மாதம் 1 – 11 ஆம் திகதி வரை சிங்கப்பூர் செல்ல அலோசியஸுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க