இலஞ்சம் மற்றும் ஊழல் சட்டங்கள்தொடர்பில் அரச அலுவலர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் அறிவூட்டும் பயிற்சிப் பட்டறை இன்று புதன்கிழமை யாழில் நடைபெற்றது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின்திணைக்களம், நீதியானதும்சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பின் ஏற்பாட்டில் அந்த அமைப்பின் யாழ் மாவட்ட இசைப்பாளர் எஸ்.தினேஸ்தலைமையில் இன்று யாழ் பொது நூலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இதன் போது இலஞ்சம் மற்றும் ஊழல்தொடர்பான சரத்துக்களை ஆய்வுசெய்வதற்கான ஆணைக்குழுவின்பணிப்பாளர் நாயகம் சரத் ஜெயமாலன, கபே அமைப்பின் பதில் நிறைவேற்றுபணிப்பாளர் மொகம்மட் மனாஷ் மகீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கியிருந்தனர்.
இந் நிகழ்வில் உள்ளூராட்சி மன்றஉறுப்பினர்கள் பொது அமைப்புக்களின்பிரதிநிதிகள், அரச அலுவலர்கள், கபேஅமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்து தெரிவிக்க