உள்நாட்டு செய்திகள்புதியவை

வைத்தியர் மொஹமட் ஷாஃபீ தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம்!

வைத்தியர் மொஹமட் ஷாஃபீ தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைத்திருந்த பெண்களிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு பெற்றுள்ளது.

இதன்படி, முறைப்பாடுகளை முன்வைத்திருந்த 601 பெண்கள் உள்ளிட்ட 758 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் 7 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வைத்தியர் ஷாஃபீ மீது முறைப்பாடுகளை முன்வைத்துள்ள பெண்கள், கொழும்பு காசல் மகப்பேற்று மருத்துவமனை மற்றும் கொழும்பு டி சொய்சா பெண்கள் வைத்தியசாலைகளில் விசேட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, பரிசோதனைகளுக்கு உபகரணங்கள் தேவைப்படும் பட்சத்தில், அவற்றை குறித்த இரண்டு வைத்தியசாலைகளுக்கும் வழங்குமாறு நீதிமன்றம், சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.

கருத்து தெரிவிக்க