தற்போதைய ஜனாதிபதியை ஆட்சிப் பீடத்தில் அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக தாம் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக டிஜிடல் உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்றைய தினம் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்களின் வாக்குரிமையைப் பெற்ற அதிகாரத்திற்கு மதிப்பளிக்காமல் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் இருபக்கங்களில் இருப்பதுடன் சட்டத்திற்கு முணான இந்த அரசாங்கத்தை சீர்குலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது குற்றவாளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு ஜனாதிபதியே முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியே நிவேற்று அதிகாரம் கொண்டவர். ஜனாதிபதியே பாதுகாப்பு அமைச்சர். ஜனாதிபதியே நீதி மற்றும் சமாதான அமைச்சர். அதனால் ஜனாதிபதியே இந்த தாக்குதலுக்கு பொறுப்பு கூறவேண்டியவர் என அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க