விளையாட்டு செய்திகள்

உலகக் கிண்ணம் – புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து அசுர முன்னேற்றம்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து அணி முதலாம் இடத்துக்கு அசுர வேகத்தில் முன்னேறியுள்ளது.

ஆஃப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற லீக் போட்டி ஒன்றில் இங்கிலாந்து அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்து.

இந்த வெற்றியின் மூலம் பெறப்பட்ட புள்ளியுடன் மொத்தமாக 8 புள்ளிகளை பெற்றுள்ள இங்கிலாந்து அணி முதலாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இதன்படி, 8 புள்ளிகளைப் பெற்ற இங்கிலாந்து அணி முதலாம் இடத்திலும் அதே 8 புள்ளிகளை பெற்ற அவுஸ்ரேலிய இரண்டாம் இடத்திலும் 7 புள்ளிகளை பெற்றுள்ள நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் முறையே மூன்றாம் நான்காம் இடங்களைப் பெற்றுள்ளன.

ஐந்தாம் இடத்தை 5 புள்ளிகளை பெற்ற பங்களாதேஷ் அணி பெற்றுக்கொண்டுள்ள நிலையில், இலங்கை அணி 4 புள்ளிகளுடன் 6ஆம் இடத்திலும், மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகள் முறையே எழாம் எட்டாம் ஒன்பதாம் பத்தாம் இடங்களை பெற்றுள்ளன.

கருத்து தெரிவிக்க