நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.ஏ. ஹலீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மூன்று முஸ்லிம் அரசியல் தலைமைகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தமது அமைச்சுப் பதவிகளை துறந்தனர்.
இதனையடுத்து, பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை 18ஆம் திகதி முஸ்லிம் கூட்டுத்தலைமைகள் கூடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
சிரேஸ்ட அரசியல் வாதியும் முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம். பௌசி தலைமையில் நாடாளுமன்ற கட்டடத்தொகுதில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதன்போது, பதவி விலகிய ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொள்வது குறித்து தலைமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க