உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

நாடாளுமன்றத்தில் இன்று பெரும் வாக்குவாதம்

வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரும் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தற்போதைய சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகருமான சிரேஷ்ட இராஜதந்திரி பிரசாத் காரியவசம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளினால் நாடாளுமன்றத்தில் பெரும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன.
குறித்த இராஜதந்திரி அமெரிக்காவின் நிறுவனமொன்றிலிருந்து சம்பளம் பெற்று உளவுத் தகவல்களை வெளிநாடுகளுக்கு வழங்கிவருவதாக மஹிந்த அணியினர் முன்வைத்த குற்றச்சாட்டையும் சபாநாயகர் கரு ஜயசூரிய நிராகரித்தார்.

வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரான பிரசாத் காரியவசம், நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகராக பணியாற்றி வருகின்றார்.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் மஹிந்தவாதி நாடாளுன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கேள்வி எழுப்பினார்.
அமெரிக்காவிடமிருந்து சம்பளம் பெற்றுவரும் ஒருவர் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திற்குள் பணிபுரிவதை ஏற்கமுடியாது என்றும் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார்.

கருத்து தெரிவிக்க