இந்திய கடற்படைக்குச் சொந்தமான ரண்வீர் கப்பல் நல்லெண்ண விஜயமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தை இன்று முற்பகல் வந்த இந்தியக் கப்பல் மற்றும் கடற்படை அதிகாரிகளுக்கு இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்பை அளித்தனர்.
இந்திய ரண்வீர் கப்பலின் கட்டளைத் தளபதி கப்டன் செனன் சந்திரரேவ், இலங்கையின் மேற்கு கடற்படை பொறுப்பதிகாரியான கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது பலதரப்பட்ட விடயங்கள் பேசப்பட்டுள்ளதோடு, இறுதியில் இருவரும் நட்புரீதியான நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக்கொண்டனர்.
சுமார் 146 மீட்டர் நீளங்கொண்டதாக உள்ள ரண்வீர் கப்பலில் பணியாளர்கள் மற்றும் கடற்படை அதிகாரிகள் 273 பேர் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தனர்.
இந்த மூன்றுநாள் விஜயத்தின்போது இலங்கை கடற்படையினால் ஏற்பாடு செய்திருக்கும் பல்வேறு நிகழ்வுகளில் இந்திய கடற்படையினர் கலந்துகொள்ளவுள்ளனர்.
கருத்து தெரிவிக்க