வெளிநாட்டு செய்திகள்

பீகாரைத் தாக்கும் இரட்டைத்துயரம்-நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு

கடும் வெயில் மற்றும் வறட்சி, மூளைக்காய்ச்சல் என ஒரே நேரத்தில் இருவித பாதிப்புகளுக்கு இந்தியாவின் பீகார் மாநிலம் உள்ளாகியுள்ளது. இந்த பாதிப்புகளால் 294 பேர் வரையில் உரியரிழந்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில் வெப்பம் மற்றும் வறட்சியினால் இதுவரை 184 பேர் உயிரிழந்துள்ளதோடு மூளைக்காய்ச்சலினால் 110 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

வெப்பத்தினால் அதிகபட்சமாக அவுரங்காபாத் மாவட்டத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் முதியோர் மற்றும் பெண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் பீகாரை கடந்த ஒரு மாதமாக மூளைக்காய்ச்சலும் கடுமையாகத் தாக்கி வருகிறது.

மூளைக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் 500 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாநிலத்தில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது.

கருத்து தெரிவிக்க