சீனாவின் சிசுவான் மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 10.55 மணியளவில் முதல் நிலநடுக்கமும் இன்று காலை மீண்டும் ஒரு நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது.
நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் 6.0 ரிக்டர் ஆக பதிவானதோடு 2 வது நிலநடுக்கம் 5.3 ரிக்டர் ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கங்களால் சிசுவான் மாகாணத்தில் உள்ள 11 பேர் உயிரிழந்த நிலையில் 122 பேர் காயம் அடைந்துள்ளனர்.
உயரமான கட்டிடங்களில் இருந்த மக்கள் கட்டிடம் குலுங்கியதை அடுத்து, வீதிக்கிறங்கி ஒட்டியுள்ளனர். சுமார் ஒரு நிமிடம் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நீடித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அண்டை மாநிலமான யுனான் மாகாணத்திலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர முடிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க