உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

மஹிந்தவுக்கு குண்டுதுளைக்காத வாகனம் கொள்வனவு: அதிருப்தியில் ஜே.வி.பி.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈட்டை வழங்காமல், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு வாகனம் கொள்வனவு செய்ய 1000 இலட்சம் ரூபா நிதி ஒதுக்க மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமை நியாயமான செயற்பாடா என்று ஜே.வி.பி கேள்வி எழுப்பியுள்ளது.
எனினும் ஜே.வி.பியின் குற்றச்சாட்டை ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்கள் திட்டவட்டமாக நிராகரித்ததை அடுத்து இந்த ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்ற ஒதுக்க மதிப்பீட்டு அறிக்கை குறித்து ஆராய சபாநாயகர் கரு ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.
படவிளக்கம்
நாடாளுமன்றம் இன்றைய தினம் பிற்பகல் ஒருமணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமாகியது.
இதன்போது ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க நிலையியற் கட்டளைச் சட்டத்தின்கீழ் சபையில் கேள்வி ஒன்றை எழுப்பினார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் நிரந்தரமாக அங்கவீனமுற்ற நபர்களுக்கு எந்தவித நட்டஈடுகளையும் அரசாங்கம் கொடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, ஆனால் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் காணி அமைச்சருக்கு புதிய வாகனங்களை கொள்வனவு செய்யவும், அரச முயற்சிகள் அமைச்சரது இல்லத்தை திருத்தம் செய்யவும் 1000 இலட்சம் ரூபா எந்த அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் வினவினார்.

கருத்து தெரிவிக்க