அமைச்சரவை கூட்டம் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறுகின்ற போதிலும் கடந்த 11ம் திகதி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Update News
தெரிவுக்குழு விவகாரத்தினால் ஒருவாரகாலமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இலங்கை அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் கூடியது.
கடந்த 04ஆம் திகதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் 11ஆம் திகதியே நடத்தப்படவிருந்தது.
எனினும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து விசாரணை செய்துவரும் ஜனாதிபதி தெரிவுக்குழு விவகாரத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே பெரும் முரண்பாடுகள் ஏற்பட்டன.
இந்தத் தெரிவுக்குழு விசாரணையின்போது ஜனாதிபதி சிறிசேன மீதே அதிகளவான குற்றச்சாட்டுக்கள் வெளியாகியதை அடுத்து கடும் அதிருப்திக்குள்ளான ஜனாதிபதி, அந்தக் குழுவை கலைக்குமாறு பிரதமரிடம் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
பின்னர் தெரிவுக்குழுவையும் சந்திக்க ஜனாதிபதி முயற்சித்தபோதிலும் அதுவும் கைகூடவில்லை.
இதன் காரணமாக நாடாளுமன்றத் தெரிவுக் குழுவைக் கலைக்கும்வரை அமைச்சரவையை கூட்டப்போவதில்லை என்ற முடிவை ஜனாதிபதி எடுத்திருந்தார்.
இருந்த போதிலும் மகாநாயக்க தேரர்கள், புத்திஜீவிகளின் ஆலோசனைப்படி நாட்டின் நலன்கருதி மீண்டும் அமைச்சரவையை கூட்டுமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது.
மேலும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணையின்போது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படும் வகையிலான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டால் அது ஊடகங்களுக்கு முன்பாக வெளிப்படுத்தக்கூடாது என்கிற தீர்மானத்திற்கு தெரிவுக்குழு உறுப்பினர்கள் வந்தனர்.
இந்த நிலையிலேயே தனது முடிவை சற்று தளர்த்திய ஜனாதிபதி சிறிசேன, மீண்டும் அமைச்சரவையை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க