உலகக்கிண்ண போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 2003-ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரும், 2019-ம் ஆண்டு ரோகித் சர்மாவும் அடித்த ஒரே மாதிரியான சிக்சர் காட்சிகள் வைரலாகி வருகின்றது.
இருவரும் அடித்த அந்த சிக்சரை ஐ.சி.சி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
இறுதியாக இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 89 ஓட்ட வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இதில் ஆட்டநாயகனாக ரோகித் சர்மா தெரிவு செய்யப்பட்டார். அவர் 113 பந்துகளை சந்தித்து 140 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
இந்த ஆட்டத்தின்போது ஹசன் அலி வீசிய பந்தில் ரோகித் சர்மா அடித்த சிஸ்சரும் 2003-ம் ஆண்டு உலகக்கிண்ண போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சோயிப் அக்தரின் பந்தில் சச்சினின் சிஸ்சரும் ஒரே மாதிரியானவை என ஐ.சி.சி தெரிவித்துள்ளது.
இதேவேளை 2003-ம் ஆண்டு உலகக்கிண்ண போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க