சினிமா

கதிர், சூரி இணைந்து உருவாகும் சர்பத்

பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து நடிகர் கதிர், நகைச்சுவை நடிகர் சூரியுடன் இணைந்து சர்பத் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

கதிர் தற்போது விஜய்யுடன் ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருவதோடு ‘சர்பத்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தினை பிரபாகரன் இயக்கி வருகிறார்.

இதில் கதிர் உடன் முதல் முறையாக சூரி இணைந்து நடிக்கிறார். கதாநாயகியாக ரகசியா அறிமுகமாகிறார்.

முக்கிய கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து, ஆகியோர் நடிக்கிறார்கள்.

கருத்து தெரிவிக்க