பாகுபலி பட இயக்குனர் எஸ். எஸ். ராஜமௌலியின் அடுத்த படமான ஆர். ஆர். ஆர் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக சினி வட்டார செய்திகள் குறிப்பிடுகின்றன.
ராம்சரண், ஜீனியர் என். டி. ஆர், அலியா பட், அஜய்தேவ்கான், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைத்து வருகின்றார். இரண்டு இந்திய போராட்ட வீரர்களின் கதையை கருவாக கொண்ட இப்படம் 2020ம் ஆண்டு ஜீலை 30 இல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட இந்தியாவின் முக்கிய 10 மொழிகளில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ராம்சரண் தேஜா மற்றும் ஜீனியர் என். டி. ஆர் இணைந்து நடித்து வரும் இந்தப்படத்தின் முதல்கண்ணோட்டம் வரும் ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தில் வெளிவர வாய்ப்புள்ளதாகவும், இத்தகவல் உறுதி செய்யப்பட்டால் ராம்சரண் மற்றும் ஜீனியர் என. டி. ஆர் ரசிகர்களுக்கு அன்றைய தினம் விருந்தாக இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.
கருத்து தெரிவிக்க