இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள், தென்னாசியாவில் புதிய வகை பயங்கரவாதம் ஒன்றின் அச்சுறுத்தல் இருப்பதை தெளிவாக்கியுள்ளதாக நேபாளம் தெரிவித்துள்ளது.
நேபாள பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரான இஸ்வார் போக்ஹ்ரல் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
காத்மண்டுவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது கருத்துரைத்த அவர், உலகளாவிய ரீதியில் இடம்பெறும் பயங்கரவாத தாக்குதல்களின் மூலம் நேபாளம் சிறந்த பாடத்தை கற்றுக்கொண்டிருக்கிறது என்று கூறினார்.
இந்தவகையில் தென்னாசியாவில் புதிய வகை பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதை இலங்கையின் ஏப்ரல் குண்டுத்தாக்குதல் தெளிவாக உணர்த்தியுள்ளது என்றும் நேபாள பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க