உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

நீராவியடிப்பிள்ளையார் ஆலய விவகாரம் -இனமுறுகலை ஏற்படுத்த முயற்சி

செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலய நிர்வாகம் தொடர்பில் பொய் உரைத்து இன நல்லிணக்கத்தை குழப்பும் வகையிலான செயற்பாடுகளில் சிலர் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அப்பகுதியினர் தெரிவிக்கையில், அமைதிக்கு பங்கம் இன்றி இரு தரப்பினரும் வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும் சிலர் சிங்கள மக்களை தூண்டி விட்டு இரண்டு முறை ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பௌத்த விகாரையின் விகாராதிபதி ஒருவர் நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் பற்றியும் அதன் நிர்வாகம் பற்றியும் தவறான புரிதலினை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்துவருகின்றார்.

நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் என்று ஒன்று இங்கு இல்லை என்றும் இதனை தமிழர்கள் அபரிக்க முயற்சி செய்வதாகவும் ஆலய நிர்வாகத்தினர் தன்னை அவதூறாக பேசியதாகவும் சிங்கள மக்கள் மத்தியில் அவர் விதைத்து வருகின்றார்.

இது, இன நல்லிணக்கத்தினை குழப்புவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை எனவும் இவ்வாறான விடயங்களை அரசு உடனடியாக தீர்த்து வைக்க வேண்டுமெனவும் பொது மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க