இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கம்போடியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 26ஆம், 27ஆம் திகதிகளில் குறித்த விஜயம் அமையவுள்ளவுளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்போடிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்து கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கம்போடிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
கருத்து தெரிவிக்க