ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் நாடாளுமன்ற விஷேட தெரிவுக் குழுவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்ற விஷேட தெரிவுக்குழு அமைக்கப்பட்டது.
குறித்த குழு முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி எதிர்ப்பை வெளியிட்டு வந்தார். இதனையடுத்து, ஜனாதிபதிக்கும் நாடாளுமன்ற விஷேட தெரிவுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் நீடித்து வந்தது.
இந்த நிலையில், ஜனாதிபதியுடனான முரண்பாடுகளை நிவர்த்திக்கும் நோக்கில் அவரை சந்திக்க நாடாளுமன்ற விஷேட தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சம்மதம் வெளியிட்டுள்ளதாக அரசியல் வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்து தெரிவிக்க