ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திவரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு உறுப்பினர்கள் சபாநாயகர் கருஜயசூரியவுடன் நாளை ( 18) பேச்சு நடத்தவுள்ளனர் என தெரியவருகின்றது.
குறித்த தெரிவுக்குழுவை தான் ஏற்கப்போவதில்லை என்றும், அதன் முன்னிலையில் பாதுகாப்பு அதிகாரிகள் சாட்சியமளிக்ககூடாது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.
எனினும், ” நாடாளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ், எந்தவொரு அரச அதிகாரிக்கும் அழைப்பு விடுக்கும் அதிகாரம் தெரிவுக்குழுவுக்கு உள்ளது.
தெரிவுக்குழு முன்பாக சாட்சியமளிக்க மறுக்கும் எந்த அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.” என்றும் தெரிவுக்குழு உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில் தெரிவுக்குழுவின் அமர்வை நிறுத்துவதா, இல்லையா என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்று சபாநாயகரும் அறிக்கையொன்றின் ஊடாக பதிலடி கொடுத்துள்ளார்.
இதனால் நிறைவேற்று அதிகாரத்துக்கும், சட்டவாக்கத்துக்குமிடையில் முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தெரிவுக்குழு உறுப்பினர்கள், சபாநாயகரை நாளை சந்தித்து இவ்விவகாரம் குறித்து பேச்சு நடத்தவுள்ளனர்.
கருத்து தெரிவிக்க