திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கும் படங்களுக்கு தானே குரல் கொடுக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு, ஓ பேபி மிஸ் கிரான்னி என்ற கொரியன் பட ரீமேக்கில் நந்தினி ரெட்டியின் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ளார்.
ஜீலை 5ம் திகதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், தன்னுடை மஜிலி பட வெற்றிக்குப் பிறகு இப்படத்தையும் வெற்றிப் படமாக்க வேண்டும் என்று நாளுக்கு நாள் பல்வேறு ஊடகங்களுக்கு சென்று அப்படம் குறித்தும், அதில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்தும் அதிரடியாக பேசி வருகின்றார் சமந்தா. மேலும், இப்படத்தில் தன்னை ஒரு சிறந்த நடிகையாக நிரூபிக்க கிடைத்த சந்தர்ப்பத்தை தான் சரியாக பயன்படுத்தி இருப்பதாகவும், இப்படத்திற்கு பிறகு தன்னை தேடி இயக்குனர்கள் வித்தியாசமான கதைகளுடனேயே வருவார்கள் என்றும் தெருவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க