நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்ததினத்தன்று திருமணம் நடைபெறவுள்ளது.
இந்த தகவல் அண்மையில் இந்திய பிரதமர் கொழும்புக்கு வந்திருந்தபோது வெளியாகியுள்ளது.
கொழும்பு இந்திய இல்லத்தில் நரேந்திரமோடியை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, தினேஸ் குணவர்த்தன ஆகியோர் சந்தித்தனர்.
இதன்போது நாமல் ராஜபக்சவை ஏற்கனவே ஒருமுறை சந்தித்ததாக நரேந்திர மோடி நினைவுப்படுத்தினார்.
இந்த சந்தர்ப்பத்தில் நாமல் தாம் செப்டம்பர் 17ஆம் திகதியன்று திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக குறிப்பிட்டார்.
இதனை கேட்ட நரேந்திர மோடி ஏன் செப்டம்பர் 17ஐ தெரிவுசெய்தீர்கள் என்று நாமலிடம் கேட்டபோது விசேடம் ஒன்றும் இல்லை என்று குறிப்பிட்டார்
எனினும் அன்று நல்லநாள் என்று மஹிந்த ராஜபக்ச பதிலளித்தார்.
இந்தவேளையில் ஏன் இதனை கேட்டேன் தெரியுமா? என்று நரேந்திர மோடி நாமலிடம் கேட்டார்.
அவர் தெரியாது என்று நாமல் பதிலளிக்க, எனது பிறந்தநாளும் செப்டம்பர் 17 என்று மோடி கூறினார்.
இந்தநிலையில் நாமல் ராஜபக்சவின் எதிர்கால மனைவி பிரபல விளையாட்டு ஆர்வலர் திலக் வீரசிங்கவின் மகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க