உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

முல்லைத்தீவு நீராவியடி ஆலயத்தில் மீண்டும் சிங்கள மக்கள்ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அடாத்தாக அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமஹா விகாரைக்கு கொழும்பு அனுராதபுரம் வெலிஓயா பகுதியிலிருந்து மூன்று பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட சிங்கள மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மேலும் வெலிஓயா பிரதேசத்தில் இருந்து இரண்டு பேருந்துகளில் வந்தவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தேசிய உரிமைகள் இயக்கத்தின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் தலைமையில் 5 க்கும் மேற்பட்ட பிக்குகள் குருகந்த ரஜமஹா விகாரை விகாராதிபதி கொலம்ப மேதாலங்க தேரர் மற்றும் 300 க்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த சர்ச்சைக்குரிய ஆலயப்பகுதியில் இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கமின்றி வழிபாடுகளை மேற்கொள்ளமுடியும் என முல்லைத்தீவு மாவடட நீதிமன்று கடந்த மே மாதம் 6 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியது

இதேவேளை அனுமதியற்ற முறையில் நடப்படட விகாரை பெயர்ப்பலகை மற்றும் பிள்ளையார் ஆலய பெயர்ப்பலகை ஒன்று ஆகியன வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் அகற்றப்பட்டது

இந்நிலையில் விகாரை பெயர்ப்பலகை அகற்றப்பட்டமை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே விகாரை வளாகத்தில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்து தெரிவிக்க