உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நாடாளுமன்ற தெரிவுக்குழுவை எந்த அரசியல் சக்திகளும் நிறுத்தக் கூடாது

மூன்று குடும்பங்கள் மாத்திரமே செய்த படுபாதகச் செயலின் சூத்திரதாரிகள் இனங்காணப்பட வேண்டும்

அதற்கான சரியான தெரிவு நாடாளுமன்ற தெரிவுக் குழுதான்.

குறித்த தெரிவுக்குழுவை இடைநிறுத்துவதற்கு எந்த அரசியல் சக்தியும் முனையக்கூடாது.இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி குறிப்பிட்டார்.

வெல்லாவெளி பிரதேசத்தில் தையல் பயிற்சியினை நிறைவு செய்த யுவதிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.இதன் பெறுமதி 18 இலட்சம் ரூபாயாகும்.இதனை வழங்கும் வைபவம் வெல்லாவெளி காலசார மண்டபத்தில் அமைச்சரின் இணைப்பாளர் எம்.கண்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர் தெரிவுக்குழுவை மூடிமறைக்கும் வேலைத்திட்டங்களில் ஜனாதிபதியோ பிரதமரோ வேறு எந்த அரசியல் தலைமைகளோ ஈடுபடக் கூடாது.

உண்மைகளைக் கண்டறிய வேண்டும்.குறித்த படுபாதகச் செயலின் பின்னணி என்ன? யார் சூத்திரதாரிகள் ஏன் அப்பாவிகளான கிறிஸ்த சமுகத்தை தெரிவு செய்தார்கள்? இவைகளுக்கான விடைகளை தெரிவுக்குழு மூலமாகவே வெளிப்படுத்த வேண்டும்.

இதற்கான அழுத்தத்தை மரியாதைக்குரிய கொழும்பு அதிமேற்றிராணியார் மல்கம் ரஞ்சித் பேராயர் அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும்.விடுதலைப்புலிகள் காலத்தில் நடந்த சம்பவங்களை முஸ்லிம் சமூகமோ பெரும்பான்மை சிங்கள் சமூகமோ ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய பொறுப்பில் விடவில்லை.

அதேபோல் இச்சம்பவமும் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் சொந்தமானதல்ல.மூன்று குடும்பங்களுக்கு மாத்திரம் சொதந்தமானது.என்றார்.

கருத்து தெரிவிக்க