மழை மற்றும் இங்கிலாந்து மைதானங்களில் காணப்படும் வித்தியாசமான விக்கட்டுக்களினால், தான் 2019 ஐ.சி.சி போட்டிகளில் ஏமாற்றம் அடைந்துள்ளதாக இலங்கை அணி முன்னாள் கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
2019 ஐ.சி.சி போட்டிகளில் பலபோட்டிகள் மழையினால் ரத்தானதோடு வெவ்வேறு மைதாங்கங்ளிலும் வெவ்வேறு விதமான விக்கட்டுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் சங்கக்கார தாம் போட்டிகளில் அடைந்த அதிருப்தி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
“சீரான நடுநிலை பிட்சுகள் இது போன்ற ஒரு உலகளாவிய போட்டிக்கு ஒரு முக்கிய தேவை, அது துரதிர்ஷ்டவசமாக எப்போதுமே இருப்பதில்லை.
மழை நேரங்களில் மைதானத்தை முழுமையாக மூடி பாதுகாப்பது வழக்கத்தில் இல்லாமை என்பன ஏற்க முடியாத ஒன்று.
வடிகால் அமைப்புக்களிலும் இடத்துக்கு இடம் வேறுபாடு காணப்படுகிறது.
பிரிஸ்டோலில் இடம்பெற்ற இலங்கை- பாகிஸ்தான் போட்டிகள் மைதான ஈரலிப்பினால் நிறுத்தப்பட்டது. இதேவேளை கடும் -மழையிலும் இங்கிலாந்து- மேற்கிந்திய போட்டிகள் இடம்பெற்றன. இவ்வாறு வடிகால் முறைமைகள் உட்பட பல விடயங்களால் தாம் அதிருப்தி அடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க