ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தல் ஒன்றுக்கு செல்லவேண்டும். அதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று ஜனாதிபதி விரும்புவதாக கூறப்படும் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியும் எதிர்க்கட்சியான பொதுஜன பெரமுனவும் இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஜனாதிபதியின் கவனத்துக்கு இந்த விடயத்தைக் கொண்டு வருவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகலை தீர்ப்பது தொடர்பாகவும் யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
இதேவேளை ஜனாதிபதியின் சர்வஜன வாக்கெடுப்பு நிலைப்பாட்டுக்கு சட்டமா அதிபர் தமது ஆதரவு நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
எனினும் இந்த நிலைப்பாட்டுக்கு செல்ல பல சட்டசிக்கல்கள் இருப்பதாக சட்டத்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கருத்து தெரிவிக்க