தந்தையர் தினத்தை முன்னிட்டு, பிரான்ஸ் ஏர்வேஸ் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றும் தந்தை அவரது பிள்ளைகளுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.
தமது விமான நிறுவனத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் தந்தை,பிள்ளைகளை அவர்களுக்கே தெரியாமல்,ஒன்று சேர்த்து அதிர்ச்சியளித்துள்ளது.
ஜூன் 16 உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரான்ஸ் ஏர்வேஸ் நிறுவனத்தில் உலகின் பல நாடுகளில், பல நேர வித்தியாசத்தில், பணிபுரியும் தந்தையையும், அவர்களது பிள்ளைகளது பட்டியலையும் தெரிவு செய்தது.
அனைவரையும் ஹீத்ருவில் இருந்து சன்டியாகோ வரை பயணிக்கும் விமானத்துக்கான குழுவில் பணியமர்த்தியது.
திடீரென பணிக்கு வந்த போது அன்றைய தினம் தன்னுடன் பணியாற்றப் போவது தன் தந்தை தான் என கண்டு மகிழ்ந்தனர்.
வாடிக்கையாளர் சேவை, விமானி என மொத்த குழுவுமே தந்தை மகன், அல்லது தந்தை மகளாகவே அமைந்தது.
தங்கள் தந்தையின் பணியால் ஈர்க்கப்பட்டு, அதே பணியை தாங்களும் தேர்ந்தெடுத்ததாகவும், ஆனால், வாழ்நாளில் ஒரு முறை கூட இது போல் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததில்லை என்றும் மகன், மகள்கள் பெருமிதம் தெரிவித்தனர்.
மேலும் தந்தையர்களும் தங்கள் அனுபவ பாடங்களை, தங்கள் பிள்ளைகளுடன் பகிர்ந்து மகிழ்ந்தனர்.
கருத்து தெரிவிக்க