பூனையைப் போன்ற உருவத்தில் பாகிஸ்தான் அமைச்சர் தோன்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுவருகிறது.
பூனை காதுகளுடன் இருப்பது போன்று பேஸ்புக் நேரலையில் குறித்த அமைச்சர் காட்சியளித்துள்ள நிலையில் இதை பலரும் பகிந்துள்ளனர்.
இந்நிலையில்,தவறுதலாக இவ்வாறு புகைப்படம் வெளியாகி உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சரான கைபெர் பக்துவா, அலுவல் ரீதியாக அதிகாரிகளுடனான சந்திப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அச்சந்திப்பை ஃபேஸ்புக்கில் நேரடியாக பதிவு செய்யப்பட்டது.
இதன்போது முகத்தை பூனைபோல தோற்றமளிக்கச் செய்யும் செயலியை தவறுதலாக க்ளிக் செய்ததால் இவ்வாறு புகைப்படம் மாற்றமடைந்துள்ளது என கூறப்படுகின்றது.
இதனால் அமைச்சர் உள்ளிட்டோர் பூனையைப்போலவே நேரலையில் தோன்றினர்.
கருத்து தெரிவிக்க