உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

 சர்வஜன வாக்கெடுப்புக்கு தயாராகிறார் மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய கையோடு சர்வஜன வாக்கெடுப்புக்குரிய அறிவிப்பை விடுப்பார் என தகவல் கிடைத்துள்ளதாக கூட்டு எதிரணி இன்று ( 15) தெரிவித்தது.

பத்தரமுல்லையிலுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையைகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலுயே நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மேற்படி தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

”  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலான மோதல் உச்சம் தொட்டுள்ளதால் இவர்களால் இனியும் ஆட்சியை கொண்டு நடத்த முடியாது.

எனவே, நாடாளுமன்றத் தேர்தலொன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி தயாராகிவருகின்றார். நாட்டின் தற்போதையை சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பொதுத்தேர்தலை நடத்துவதற்கு ஆணை வழங்குமாறு சர்வஜன வாக்கெடுப்பை அவர் நடத்தவுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

18 ஆம் திகதி அமைச்சரவை கூடுகின்றது. அன்றைய தினமே நாடாளுமன்ற அமர்வும் ஆரம்பமாகவுள்ளது. இவ்விரண்டு கூட்டங்களிலும் அனல் பறக்கும் என்பது உறுதி.

ஆகவே, நாட்டில் மீண்டுமொரு நெருக்கடிக்கு வழிவகுக்காமல், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான யோசனையை முன்வைக்குமாறு பிரதமரிடம் கேட்டுக்கொள்கின்றோம். தற்போதைய பிரச்சினைகளுக்கு பொதுத்தேர்தலே இறுதி தீர்வாக – தெரிவாக உள்ளது.” என்றார் ரோஹித அபேகுணவர்தன.

கருத்து தெரிவிக்க