கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவிடம், பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இன்று 8 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
21/4 தாக்குதலின் பின்னர் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் 22 ஆம் திகதி பாசிக்குடாவிலுள்ள ஹோட்டலொன்றில், சவுதி அரேபிய பிரஜைகள் மூவரை ஹிஸ்புல்லா இரவோடிரவாக சந்தித்திருந்தார்.
அத்துடன், ஹிஸ்புல்லா முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளார் என முன்னாள் போராளியொருவரும் முறைப்பாடு செய்திருந்தார்.
இவ்விரண்டு விடயங்கள் உட்பட மேலும் சில காரணிகள் தொடர்பிலேயே ஹிஸ்புல்லாவிடம், 8 மணிநேரம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
முற்பகல் 9.30 மணியளவில் வாக்குமூலம் அளிக்கவந்த ஹிஸ்புல்லா, 5.45 மணியளவிலேயே விசாரணைப் பிரிவிலிருந்து வெளியேறினார்.
கருத்து தெரிவிக்க