விளையாட்டு செய்திகள்

இலங்கை அணிக்கு 335 என்ற அசுர வெற்றி இலக்கு!

உலகக் கிண்ண தொடரின் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்ரேலிய அணி 334 ஓட்டங்களை பெற்றுள்ளது.

உலகக் கிண்ண தொடரின் 20ஆவது போட்டி இன்று சனிக்கிழமை கென்னின்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி அவுஸ்ரேலிய அணிக்கு முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை வழங்கியது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 07 விக்கெட்களை இழந்து 335 என்ற வெற்றி இலக்கை இலங்கை அணிக்கு வழங்கியுள்ளது.

அவுஸ்ரெலிய அணியின் துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் ஆரோன் பிஞ் 153 ஓட்டங்களையும் ஸ்டீவ் ஸ்மித் 73 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் இசுரு உதான மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோ தலா இவ்விரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

கருத்து தெரிவிக்க