ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கும் இடைத்தொடர்பு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான ஐந்தாவது ஆசிய மாநாடு தஜிகிஸ்தானில் இன்று ஆரம்பமாகியது.
இந்த மாநாடு நாளை நிறைவடையவுள்ளது.
ஜனாதிபதியும் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
இலங்கை உட்பட 27 நாடுகள் இந்த மாநாட்டில் அங்கம் வகிக்கின்றன.
ஆசியாவின் சமாதானத்தையும் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் மேம்படுத்துவது தொடர்பிலான கூட்டு ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்குடன் 1992ஆம் ஆண்டில் இந்த பல்தேசிய மன்றம் ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கை 2018ஆம் ஆண்டில் இதன் அங்கத்துவ நாடாக மாறியது. அதன்பின்னர் இந்த நாடுகளுடன் இலங்கை மேற்கொண்டு வந்த இருதரப்பு உறவுகள் மேலும் விரிவடைந்தன. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமமோலி ரஹ்மான் உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்ட அரச பிரதிநிதிகளையும் சந்தித்து பேசவுள்ளார்.
கருத்து தெரிவிக்க