அமெரிக்க வெள்ளை மாளிகைப் பத்திரிகை செயலாளர் ,பேச்சாளர் சாரா சாண்டர்ஸ், இம்மாத இறுதியில் பதவி விலகுகிறார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதேவேளை தமது இதுநாள் வரையிலான பணிகளை நிறைவு செய்து கொள்வதாகத் 36 வயது சண்டர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
தாம் இதுவரை ஈடுபட்டிருந்த பணி தமக்கு வாழ்நாள் முழுவதும் கௌரவத்தை அளிக்கக்கூடியது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சண்டர்ஸின் பங்களிப்புக்கு ஜனாதிபதி ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளதோடு அவர் ஆளுநராக போட்டியிடுவார் என நினைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையின் அடுத்த பத்திரிக்கை செயலாளர் யார் என்பது தொடர்பான விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
கருத்து தெரிவிக்க