ஆடுகளத்தன்மையில் பாகுபாடு காட்டுவதாக, சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் மீது இலங்கை கிரிக்கெட் அணி குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளது.
ஊலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் 2 ஆட்டங்கள் (பிரிஸ்டல் மைதானம்) மழையால் கைவிடப்பட்டது.
அதிக புற்கள் நிறைந்த கார்டிப்பில் நடந்த மற்ற இரு ஆட்டங்களில் இலங்கை அணி, ஒன்றில் வெற்றியும், மற்றொன்றில் தோல்வியும் அடைந்தது.
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கட் சம்மேளனம்,ஆடுகளத்தன்மையில் தமக்கு பாகுபாடு காட்டுவதாக இலங்கை அணி நிர்வாகம் முறைப்பாடு செய்துள்ளது.
தமது அணிக்கு ஒரு மாதிரியாகவும், மற்ற அணிகளுக்கு வேறு மாதிரியாகவும் ஆடுகளத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்குவது நிச்சயம் நியாயமற்றது என்று இலங்கை அணியின் முகாமை தெரிவித்துள்ளது.
பயிற்சி வசதிகளும் இலங்கை அணிக்கு திருப்திகரமாக இல்லை. கார்டிப்பில் 3 வலை பயிற்சி இடம் இருந்தும் 2-ஐ மட்டுமே தமது ஒதுக்கப்பட்டன.
பிரிஸ்டலில் தாம் தங்கியிருந்த விருந்தகத்தில்; நீச்சல் குளம் இல்லை.
இவை எல்லாம் ஒவ்வொரு அணிக்கும் அவசியமானதாகும்.
ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்கள் பயிற்சியை முடித்து விட்டு நீச்சல் குளத்தில் தங்களை ஓய்வு செய்து கொள்வது வழக்கம்.
அதே சமயம் பாகிஸ்தான் பங்களாதேஸ் அணியினர் பிரிஸ்டலில் தங்கியிருந்த விருந்தகத்தில் நீச்சல் குளம் வசதி இருந்தது என்றும் இலங்கை அணி குறி;ப்பிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க