வங்கிகளில் போலியான பெயர்களில் கணக்கு தொடங்கி சுமார் 15 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி சர்தாரியின் சகோதரியை பொலிஸார் கைது செய்தனர்.
பாகிஸ்தானின் யுனைடெட் வங்கி மற்றும் சம்மிட் வங்கிகளில் 29 போலி கணக்குகளை தொடங்கி சுமார் 15 கோடி ரூபாய் அளவில் நிதி மோசடி இடம்பெற்றமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இதில் பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, அவரது சகோதரி பர்யால் தல்புர் ஆகியோர் உள்பட 20 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த மோசடி தொடர்பாக சம்மிட் வங்கி தலைவரும், சர்தாரியின் நண்பருமான உசேன் லவாய் கடந்த வருடம் ஜூலை மாதம் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க