உலகம்

சீனாவைக் குறைத்து மதிப்பிட்டதால் சிக்கல்களை எதிர்கொள்ளும் அமெரிக்கா !

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆரம்பித்த வர்த்தகப் போர், சீனப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என , ஐ.நா வுக்கான சிங்கப்பூரின் முன்னாள் தூதர் அண்மையில் அமெரிக்காவின் இதழ் ஒன்றில் வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். அத்தோடு சீனா மீது தொழில்நுட்ப ஏற்றுமதி தொடர்பாக சில கட்டுப்பாடுகளையும் அமெரிக்க அரசாங்கம் விதித்துள்ளதாகவும் அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவாக, அதிவேகத்துடன் வளர்ச்சியடைந்து வரும் சீனாவோடு ஒப்பிடும் போது அமெரிக்காவிடம் பன்முகத் தன்மையோ அல்லது நீண்ட கால தூர நோக்கோ இல்லை. மாறாக தன்னுடைய செயல்களின் வழியாக அமெரிக்க அரசாங்கம், சர்வதேச சமூகத்தில் சீனாவின் தகுதி நிலையை உயர்த்தி, சீனாவை மேலதிக ஆற்றல் வாய்ந்த நாடாக கருதச் செய்துள்ளது.

நட்பு நாடுகளுடனான உறவை சீர்குலைத்துள்ள ட்ரம்பின் அரசாங்கம், உலக சுகாதார அமைப்பின் பங்களிப்பு உலகுக்கு முன் எப்போதையும் விட அதிகமாக தேவைப்படும் தற்போதைய நிலையில் , அமெரிக்கா அந்த அமைப்பில் இருந்து விலகியிருப்பது பொறுப்பற்ற செயலாகும். அது மட்டுமன்றி, கனடா, மெக்சிகோ, ஜேர்மன், பிரான்ஸ் போன்ற நட்பு நாடுகளிடம் சுங்க வரியை அறவிடவுள்ளதாகவும் அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளது. இதன் காரணமாக உலக அளவில் அமெரிக்காவுக்கு இருந்த மதிப்பு குறைந்து வருகிறது. இவ்வாறான போக்கு சீனாவுக்கு புவிசார் அரசியல் நலனை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

கருத்து தெரிவிக்க