உள்நாட்டு செய்திகள்புதியவை

களனி பல்கலைக்கழக மாணவியை தாக்கிய காதலன் கைது!

களனி பல்கலைக்கழக மாணவியை தாக்கிய சந்தேகத்தில் குறித்த மாணவியின் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி பல்கலைக்கழகத்துக்கு அருகில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்த மாணவி ஆபத்தான நிலையில் றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மாணவியின் காதலனான 22 வயதுடைய இளைஞர் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க