இந்தியா

இனி எடுங்க துப்பாக்கியை.. சீன எல்லை விதிகளில் மத்திய அரசின் மாஸ் மாற்றம்

லடாக்: சீனாவுடனான லைன் ஆப் கன்ட்ரோல் விதிகளை (உண்மையான கட்டுப்பாட்டு எல்லை கோடு) விதிகளை இராணுவம் மாற்றியுள்ளது, அசாதாரண ” சூழ்நிலைகளில் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதற்கு களத் தளபதிகளுக்கு அதிகாரம் அளித்து. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் நிலைமையை சமாளிக்க இராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்பு – 1996 மற்றும் 2005 இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் லைன் ஆப் கன்ட்ரோல் விதிகள் குறித்து இரு தரப்பும் தீர்வை நோக்கி செல்லவில்லை. அதேநேரம் லைன் ஆப் கன்ட்ரோல் பகுதியின் இருபுறமும் இரண்டு கிலோமீட்டருக்குள் வெடிக்கும் வெடிபொருட்களையோ அல்லது துப்பாக்கிகளையோ பயன்படுத்த வேண்டாம் என்று இரு நாடுகளும் ஒப்புக் கொண்டிருந்தன.
இந்நிலையில் கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய வீரர்கள் சீன ராணுவத்தினரின் வன்முறையால் கொல்லப்பட்டனர். மேலும் 76 இந்திய வீரர்கள் காயம் அடைந்தனர். ஆனால் எவரும் படுகாயம் அடையவில்லை என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரோந்து பாய்ண்ட் 14 க்கு அருகில் இந்திய ராணுவத்தினரை குறிவைதது இரும்பு கம்பிகள், ஆணி பதித்த கிளப்புகள் மற்றும் முட்கம்பிகளால் மூடப்பட்ட கற்களால் சீன ராணுவத்தினர் கடந்த வாரம் திங்கள்கிழமை இரவு தாக்கினர். இதில் 20 இந்திய வீரர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சீன தரப்பில் இறந்தவர்கள் விவரம் வெளியிடப்படவில்லை. ஆனால் 45 பேர் வரை இறந்திருக்கலாம் சில ஊடக தகவல்கள் என்று சொல்கின்றன.

45 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக இப்படி ஒரு கொடிய மோதல் சம்பவம் இந்தியா சீனா இடையே நடத்திப்பது இரு நாடுகளுக்கு இடையே உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த 1975 ஆம் ஆண்டில், அருணாச்சல பிரதேசத்தில் துலுனுக் லா பாஸில் நான்கு அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் வழக்கமான ரோந்துப் பயணத்தில் கொல்லப்பட்டனர். அதன்பிறகு இப்போதுதான் சீனா இந்திய வீரர்களை தாக்கி உள்ளது. சீனா இந்திய வீரர்களை தாக்கிய ஒரு வாரத்தில் பல ஆண்டுகளாக இருந்த பழமையான விதிகளில் மாற்றங்கள் வந்துள்ளன.

லைன் ஆப் கன்ட்ரோல் விதிகளை (உண்மையான கட்டுப்பாட்டு எல்லை) விதிகளை இராணுவம் மாற்றியுள்ளது, சீனாவுடனான லைன் ஆப் கன்ட்ரோல் விதிகளை (உண்மையான கட்டுப்பாட்டு எல்லை) விதிகளை இராணுவம் மாற்றியுள்ளது, அசாதாரண ” சூழ்நிலைகளில் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதற்கு களத் தளபதிகளுக்கு அதிகாரம் அளித்து. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் நிலைமையை சமாளிக்க இராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே லடாக் வன்முறை அரசியல் புயலுக்கு வழிவகுத்துள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்தவீட்டதாக கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். வெள்ளிக்கிழமை அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய சோனியா: ‘லைன் ஆப் கன்ட்ரோல் பகுதியில் எல்லை ஆக்கிரமிப்பு குறித்து இராணுவ உளவுத்துறை அரசாங்கத்தை எச்சரிக்கவில்லையா …?’ என்று கேட்டார்.

இன்று காலை பிரதமர் மோடியை ‘சரண்டர் மோடி’ என்று அழைத்த ராகுல் காந்தி, அதன் பின்னர் செயற்கைக்கோள் படங்களை சுட்டிக்காட்டி, சீனா ‘பாங்காங் ஏரிக்கு அருகே இந்திய நிலப்பரப்பைக் கைப்பற்றி உள்ளதாக தெரிவித்தார். நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன்,, இந்திய வீரர்களின் உயிர்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்பதை விளக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டார்.

கருத்து தெரிவிக்க